சினிமா செய்திகள்

‘மீ டூ’ புகார் கூறிய நடிகை மீது வில்லன் நடிகர் வழக்கு + "||" + Villain actor sues actress for complaining about Me Too

‘மீ டூ’ புகார் கூறிய நடிகை மீது வில்லன் நடிகர் வழக்கு

‘மீ டூ’ புகார் கூறிய நடிகை மீது வில்லன் நடிகர் வழக்கு
‘மீ டூ’ புகார் கூறிய நடிகை மீது வில்லன் நடிகர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தி திரையுலகில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் கணேஷ் ஆச்சார்யா. ‘டாய்லெட் ஏக் ப்ரேம் கதா’ படத்தில் சிறந்த நடனத்துக்கான தேசிய விருது பெற்றுள்ளார். தமிழில் ஜீவாவின் ‘ரவுத்திரம்’ படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். கணேஷ் ஆச்சார்யா மீது அவருடைய நடன குழுவில் பணி புரியும் 35 வயது நடன நடிகை மீ டூ புகார் கூறினார்.

“கணேஷ் ஆச்சார்யாவின் நடன குழுவில் நான் பணிபுரிந்து வருகிறேன். அவர் என்னிடம் அத்துமீறி நடக்க முயற்சிக்கிறார். ஆபாச படங்களை பார்க்க சொல்லி வற்புறுத்துகிறார். செக்ஸ் தொல்லை கொடுத்து கொடுமைப்படுத்துகிறார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என்று போலீசிலும், மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார்.

இந்த குற்றச்சாட்டை கணேஷ் ஆச்சார்யா மறுத்துள்ளார். அவர் கூறும்போது, “நடன நடிகை என் மீது கூறியுள்ள பாலியல் புகார் பொய்யானது. அவரிடம் நான் கமிஷன் கேட்டதாக சொல்வதிலும் உண்மை இல்லை. அந்த பெண் நடவடிக்கைகள் சரியில்லாததால் நடன குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டார்” என்றார்.

கணேஷ் ஆச்சார்யாவின் வக்கீல் கூறும்போது, “பொய்யான பாலியல் புகார் கூறிய நடன நடிகை மீது போலீசில் புகார் அளித்துள்ளோம். அவதூறு வழக்கும் தொடரப்படும்” என்றார்.