சினிமா செய்திகள்

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து பல கோடிகளை இழந்த அனுஷ்கா + "||" + Anushka, who lost several crores by investing in real estate

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து பல கோடிகளை இழந்த அனுஷ்கா

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து பல கோடிகளை இழந்த அனுஷ்கா
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து பல கோடிகளை நடிகை அனுஷ்கா இழந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

நடிகைகள் சினிமாவில் சம்பாதிப்பதை வேறு தொழில்களில் முதலீடு செய்து வருமானம் பார்க்கிறார்கள். தமன்னா ஆன்லைனில் நகை வியாபாரம் செய்கிறார். டாப்சி திருமண நிகழ்ச்சிகளை நடத்தி கொடுக்கும் நிறுவனத்தையும், இலியானா துணிக்கடையையும், ரகுல் பிரீத்சிங் உடற்பயிற்சி நிலையங்களையும், ஸ்ரேயாஅழகு நிலையத்தையும் நடத்துகிறார்கள்.

நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்கள். அனுஷ்காவுக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு படுக்கை அறை கொண்ட வீட்டை அனுஷ்கா வாங்கி இருந்தார்.

தெலுங்கானா விவகாரம் தலை தூக்கியபோது சொத்துகள் விலை இறங்கி விடும் என்று அனுஷ்காவை சிலர் பயமுறுத்தினர். இதனால் அந்த வீட்டை ரூ.5 கோடிக்கு விற்று விட்டார். வீட்டின் அப்போதையை மதிப்பு ரூ.10 கோடி என்கிறார்கள். விசாகப்பட்டினத்தில் ஏராளமான நிலங்களை வாங்கி போட்டு இருந்தார்.

முதல்-அமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு அமராவதியை தலைநகராக்கும் முயற்சியில் இறங்கியதால் சொத்துகள் விலை ஏறாது என்று கருதி வாங்கிய நிலங்களில் 80 சதவீதத்தை குறைந்த விலைக்கு விற்று விட்டார். ஆனால் இப்போது விசாகப்பட்டினத்தில் நிலங்களின் விலை பல மடங்கு ஏறி இருக்கிறது. இதனால் அனுஷ்காவுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதை நினைத்து அவர் கவலையில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. திருப்பத்தூரில், ரியல் எஸ்டேட் நடத்தி ரூ.5 கோடி மோசடி - பாதிக்கப்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
திருப்பத்தூரில் ரியல் எஸ்டேட் நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனுகொடுத்தனர்.