சினிமா செய்திகள்

ஹாலிவுட் படத்தில் பார்த்திபன் + "||" + Hollywood movie Parthiban

ஹாலிவுட் படத்தில் பார்த்திபன்

ஹாலிவுட்  படத்தில்  பார்த்திபன்
நடிகர் பார்த்திபன் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.
பார்த்திபன் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே கேட்கும். பார்த்திபன் மட்டுமே திரையில் தெரிவார். படத்தை கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குனர்கள் பார்த்து பாராட்டினர். 

ஒத்த செருப்பு படம் மூலம் உலக இயக்குனர்கள் வரிசைக்கு பார்த்திபன் உயர்ந்துள்ளார் என்று பாரதிராஜா புகழ்ந்தார். படத்துக்கு விருதுகளும் கிடைத்தன. ஒத்த செருப்பு படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிக்க நவாஜூதின் சித்திக்கிடம் பேசி வருகிறார்கள். இந்தநிலையில் பார்த்திபன் ஹாலிவுட் படமொன்றில் நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘‘இன்றைய தேதியின் விஷேச சேதி, விஜய் சேதுபதியின் பாதியாக நடிக்கும் துக்ளக் தர்பார். புஷ்கர் காயத்ரி வழங்கும் சுழல் என்ற வெப் தொடர். சிம்ரனின் சொந்த படம். எழில் இயக்க ராஜேஷ்குமாரின் நாவலில் நடிக்கும் படம். சமீப பிரபல இயக்குனரின் படம். மற்றும் என் இரவின் நிழல். இன்னும் சில. 

இவையன்றி இவ்வருட கடைசியில் ஒரு நேரடி ஆங்கில படத்தில் நடிக்கிறேன். இதற்காக ஹாலிவுட் இயக்குனரின் அழைப்பின் பேரில் மார்ச்சில் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கிறேன்’’. 

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.