படமாகும் ஜெயலலிதா வாழ்க்கை : ‘தலைவி’ படம் ஜூன் 26–ல் ரிலீஸ்


படமாகும் ஜெயலலிதா வாழ்க்கை :   ‘தலைவி’  படம்  ஜூன்  26–ல்  ரிலீஸ்
x
தினத்தந்தி 3 Feb 2020 10:45 PM GMT (Updated: 3 Feb 2020 5:49 PM GMT)

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது.

‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்தசாமியும் நடிக்கின்றனர். விஜய் டைரக்டு செய்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. கங்கனா ரணாவத், அரவிந்தசாமி தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. கங்கனா ரணாவத் பரத நாட்டியம் கற்று நடித்து வருகிறார். 

தலைவி படம் வருகிற ஜூன் மாதம் 26–ந்தேதி திரைக்கு வரும் என்று தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் நடிப்பது குறித்து கங்கனா ரணாவத் கூறியதாவது:– 

‘‘ஜெயலலிதா அழகான நடிகை. இந்தி நடிகை ஐஸ்வர்யாராயை போல் அழகானவர் என்று சொல்லலாம். நான் அவ்வளவு அழகான நடிகை இல்லை. எனவே ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது எனக்கு சவாலாகவே இருந்தது. எனக்கும் ஜெயலலிதாவுக்கும் உள்ள ஒற்றுமை நாங்கள் இருவருமே நடிகையாக தயங்கி இருக்கிறோம். 

ஜெயலலிதா தன்னை முழுமையாக நம்பினார். அதனால்தான் அரசியலில் சாதிக்க முடிந்தது. அதுபோல் நானும் நடிகையாக மட்டும் இல்லாமல் படம் இயக்கவும் செய்கிறேன். அவரைப்போலவே நானும் குடும்பத்துக் காக ஏங்கி இருக்கிறேன்.’’ 

இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.

Next Story