சினிமா செய்திகள்

5 மொழிகளில், ‘பாம்பாட்டம்’ ; மல்லிகா ஷெராவத் ராணியாக நடிக்கிறார் + "||" + Baambattam in 5 languages; Mallika Sherawat plays the queen

5 மொழிகளில், ‘பாம்பாட்டம்’ ; மல்லிகா ஷெராவத் ராணியாக நடிக்கிறார்

5 மொழிகளில், ‘பாம்பாட்டம்’ ; மல்லிகா ஷெராவத் ராணியாக நடிக்கிறார்
வி .சி.வடிவுடையான் டைரக்‌ஷனில், ஜீவன் நடிக்கும் படம், ‘பாம்பாட்டம்.’ தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் படம் தயாராகிறது.
பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் ராணி வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி டைரக்டர் வடிவுடையான் கூறுகிறார்:-

“பாம்பாட்டம், திகில்-சஸ்பென்ஸ் கலந்த படம். படத்தின் அதிமுக்கியமான கதாபாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறார். தனது அழகாலும், நடிப்பாலும் அதிக ரசிகர்களை சம்பாதித்தவர், இவர். பாம்பாட்டத்தில் நடிப்பதற்காக இவருக்கு ஒரு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

படத்தில் அவர், ராணி வேடத்தில் வருவார். படம் முழுக்க வருவது போல் அவருடைய கதாபாத்திரம் அமைந்துள்ளது. இந்த படத்துக்கு, அம்ரீஷ் இசையமைக்கிறார். வி.பழனிவேல் தயாரிக்கிறார்.”