சினிமா செய்திகள்

சிபி சத்யராஜ் நடித்த ‘வால்டர்’; நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை + "||" + Walter movie starring Sibi Sathyaraj ; The story of an honest police officer

சிபி சத்யராஜ் நடித்த ‘வால்டர்’; நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை

சிபி சத்யராஜ் நடித்த ‘வால்டர்’; நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை
சிபி சத்யராஜ் நடித்துள்ள ‘வால்டர்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இது, குழந்தைகள் கடத்தல் பற்றிய படம். இதில், துப்பு துலக்கும் போலீஸ் அதிகாரியாக சிபி சத்யராஜ் நடித்துள்ளார்.
சிபி சத்யராஜுக்கு ஜோடியாக ஷிரின் காஞ்ச்வாலா நடித்து இருக்கிறார். இவர்களுடன் நட்டி, சமுத்திரக்கனி, பவா.செல்லத்துரை, சார்லி, முனீஷ்காந்த், அபிஷேக், ரித்விகா, சனம் ஷெட்டி, யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வில்லன் யார்? என்பதை படக்குழுவினர், ‘சஸ்பென்ஸ்’ ஆக வைத்து இருக்கிறார்கள். யு.அன்பு டைரக்டு செய்திருக்கிறார். ‘வால்டர்’ பற்றி இவர் கூறியதாவது:-

“இது ஒரு துணிச்சலான-நேர்மையான போலீஸ் அதிகாரியை கதாநாயகனாக கொண்ட படம் என்பதால், ‘வால்டர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. படத்தை ஸ்ருதி திலக் தயாரித்து இருக்கிறார். படத்தின் உச்சக்கட்ட காட்சி மிக வித்தியாசமாக இருக்கும். இதுவரை எந்த படத்திலும் இடம் பெறாத காட்சியாக இருக்கும்.

போலீஸ் கதை என்பதால் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், ஏற்கனவே போலீஸ் படங்களை இயக்கி வெற்றி பெற்ற டைரக்டர்கள் பி.வாசு, மிஷ்கின், அறிவழகன், அருண் குமார், சாம் ஆன்டன், துரை செந்தில்குமார், ரத்னசிவா ஆகியோர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்கள்.

போலீஸ் அதிகாரிகள் வால்டர் தேவாரம், திலகவதி ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர் களாக வந்திருந்தார்கள்.”