சினிமா செய்திகள்

‘ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில், கவுதம் மேனன்! + "||" + Gautham Menon is Special appearance in the film Oh My God

‘ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில், கவுதம் மேனன்!

‘ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில், கவுதம் மேனன்!
தமிழ் பட உலகின் முன்னணி டைரக்டர்களில் ஒருவர், கவுதம் வாசுதேவ் மேனன். இவர், சில படங்களில் கவுரவ வேடங்களில் நடித்து இருக்கிறார். சில படங்களில் வில்லன் நடிகர்களுக்கு இரவல் குரல் கொடுத்துள்ளார்.
விரைவில் திரைக்கு வரயிருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தில், சிறப்பு தோற்றத்தில் வருகிறார். அசோக் செல்வன்-ரித்திகா சிங் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். ஜி.டில்லிபாபு தயாரிக்க அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியிருக்கிறார். படத்தை பற்றி இவர் சொல்கிறார்:-

“காதல் கதைகள் என்றும் அழியா தன்மை கொண்டது. எத்தனை காலம் கடந்தாலும் காதல் கதைகள் ஜெயித்துக் கொண்டே இருக்கும். மனிதன் உள்ளவரை காதலும் அழியாது. ‘ஓ மை கடவுளே’ படம் இன்றைய நாகரிக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. இதில் அசோக் செல்வன்-ரித்திகா சிங் இருவரும் காதல் ஜோடியாக நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி, சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார். இப்போது டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்துக்கு தணிக்கை குழுவினர், ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். படம், காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது.”