சினிமா செய்திகள்

ரவி வர்மா ஓவியத்தை போன்று போஸ் கொடுத்த நடிகைகள் + "||" + The actresses who gave stills like Ravi Varma's painting

ரவி வர்மா ஓவியத்தை போன்று போஸ் கொடுத்த நடிகைகள்

ரவி வர்மா ஓவியத்தை போன்று போஸ் கொடுத்த நடிகைகள்
ரவி வர்மாவின் ஓவியத்தை போன்று எடுக்கப்பட்ட நடிகைகளின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
சென்னை

ரவி வர்மாவின் எழில்மிகு ஓவியத்திற்கு புகைப்பட கலைஞரான ஜி வெங்கட் ராம் உயிர் கொடுத்துள்ளார். ’நாம்’ என்ற அறக்கட்டளையின் 2020 காலண்டருக்குகாக  வெங்கட் ராம் நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

ரவி வர்மாவின் ஓவியம் போன்று உடை, அணிகலன்கள் மற்றும் பாவனைகளுடன் எடுக்கப்பட்ட நடிகைகளின் புகைப்படங்கள் நிஜத்திற்கும் நிழலிற்கும் இடையேயான வித்தியாசத்தை குறைத்துள்ளன.

ஓவியத்தை போன்று நடிகைகள் சுருதி ஹாசன், சமந்தா, ரம்யாகிஷ்ணன், நதியா, குஷ்பு, ஷோபனா, பிரியதர்ஷினி கோவிந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், லிஸ்ஸி லஷ்மி, லஷ்மி மஞ்சு ஆகியோர் புகைப்படங்களுக்கு மாடலாகி உள்ளனர்.

கேரளா மாநிலத்திலுள்ள கிளிமண்ணூர் என்னும் இடத்தில் பிறந்த ரவி வர்மாவை அறிந்திராதவர் எவரும் இல்லை. இன்றைக்கும் நம் காலேண்டர்களில் பார்க்கும் லக்ஷ்மி, சரஸ்வதி, பரமசிவன், விஷ்ணு, விநாயகர் எல்லாமும் இவரின் ஓவியங்கள்  அவரின் தாக்கத்தில் எழுந்தவை .