சிங்கப்பூர் மியூசியத்தில் காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை


சிங்கப்பூர் மியூசியத்தில்   காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை
x
தினத்தந்தி 5 Feb 2020 10:15 PM GMT (Updated: 5 Feb 2020 9:01 PM GMT)

சிங்கப்பூர் மியூசியத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை திறந்து வைக்கப்பட்டது.

சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உலக அரசியல் தலைவர்கள், ஹாலிவுட் மற்றும் இந்தி நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்களின் மெழுகு சிலைகள் வைத்து கவுரவப்படுத்தி உள்ளனர். இந்தி நடிகர் ஷாருக்கான், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா, பிரியங்கா சோப்ரா, மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் மெழுகு சிலைகள் அங்கு வைக்கப்பட்டு உள்ளன.

நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலையையும் அந்த அருங்காட்சியகத்தில் அமைக்க ஏற்பாடுகள் நடந்தன. காஜல் அகர்வாலை அளவெடுத்து சிலையை உருவாக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. தற்போது சிலையை உருவாக்கும் பணிகள் முடிந்து நேற்று அருங்காட்சியகத்தில் காஜல் அகர்வாலின் சிலை திறந்து வைக்கப்பட்டது.

சிலை திறப்பு நிகழ்ச்சியில் நடிகை காஜல் அகர்வால் கலந்து கொண்டார். இளம் சிவப்பு நிறத்தில் உடை அணிந்து தனது மெழுகு சிலை முன்னால் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டார். நான் மகான் அல்ல, ஜில்லா, துப்பாக்கி, மாற்றான், மெர்சல், விவேகம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.

Next Story