சினிமா செய்திகள்

வெப் தொடர்கள் தயாரிப்பில் கமல்ஹாசன் + "||" + Kamal Haasan in Production of Web Series

வெப் தொடர்கள் தயாரிப்பில் கமல்ஹாசன்

வெப் தொடர்கள் தயாரிப்பில் கமல்ஹாசன்
வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க வந்துள்ளனர். தற்போது கமல்ஹாசனும் வெப் தொடருக்கு வருகிறார்.
ஹாஸ்டேஜஸ், ரோர் ஆப் தி லயன், நச் பலியே உள்ளிட்ட வெப் தொடர்களை தயாரித்துள்ள பனிஜே ஆசியா, டர்மரிக் மீடியா நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மாநில மொழிகளில் இணைய தொடர்கள் தயாரிப்பதற்கான கதை, திரைக்கதைகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “எடுத்து வரும் முதல் முயற்சிகளில் ஒன்றாக பனிஜே ஆசியா மற்றும் டர்மரிக் மீடியாவுடன் இணைந்து நிகழ்ச்சி உருவாக்கும் அற்புதமான உலகத்துக்குள் நுழைவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. கதை சொல்வதில் என்றும் நம்பிக்கையுடன் நான். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துக்கு மிகச்சிறந்த கதைகளை எடுத்துச் செல்வதில் இது அடுத்த அடி” என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் பங்களிப்பில் உருவாக்கும் இணைய தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இப்போதே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.