சினிமா செய்திகள்

நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை + "||" + Actor Vijay - along with his wife Confessions of income tax authorities

நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை

நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் நெய்வேலி  என்எல்சி சுரங்கத்திற்குள் புதன்கிழமை படமாக்கப்பட்டு வந்தன. விஜய்யும், விஜய் சேதுபதியும் மோதும் கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. 

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று பிற்பகல் 2 மணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தனர்.  அப்போது நடிகர் விஜ​யிடம் , பிகில் படத்தில் பெற்ற ஊதியம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று சம்மன் கொடுத்தனர். கொடுத்ததும் இல்லாமல், கையோடவே, நடிகர் விஜயை காரில் அழைத்து சென்றனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியாத நேரத்தில் தான், காலை முதலே  பிகில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும், பிரபல திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

அப்போது ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் நடிகர் விஜய்க்கு பிகில் படத்தில் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பபட்டது. இது குறித்து தகவல் பெறவும், நடிகர் விஜய் பெற்ற தொகைக்கான வரியை செலுத்தினாரா என்பது குறித்து ஆராயவுமே விஜய்யிடம் இந்த விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது. விஜயிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவருக்கு சொந்தமான சாலிக்கிராமம் வீடு, பனையூரில் உள்ள பண்ணை வீடு ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். 

இந்த நிலையில், நடிகர் விஜய் வீட்டில் 2 -வது நாளாக வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.  சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் மற்றும் ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. 

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் இருந்து ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியனின் நண்பர் சரவணன் வீட்டிலிருந்து ரூ.17.60 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

நடிகர் விஜய, பிகில் திரைப்படத்திற்கு  ரூ. 30 கோடி சம்பளமாக பெற்றதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்து உள்ளது. விஜய்யின் பனையூர் வீட்டில் 18 மணி நேரமாக  சோதனை நடந்து வரும் நிலையில் வருமான 
வரித்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 77.கோடியை வருமானவரித்துறை பறிமுதல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும்  வருமான வரித்துறை அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் விஜயின்  வருமானம் குறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து 20 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் வாக்குமூலம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது -கொரோனா விழிப்புணர்வுப் பாடல்
அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது கொரோனா விழிப்புணர்வுப் பாடலில் இணைந்த வைரமுத்து எஸ்.பி. பால சுப்பிரமணியம்
2. எனது கருத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர்களுக்கு நன்றி -ரஜினிகாந்த்
எனது கருத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி! என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.
3. ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அவருக்கும் தெரியாது, இறைவனுக்கும் தெரியாது - நடிகர் வடிவேலு
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது என்று நடிகர் வடிவேலு கிண்டலாக கூறியுள்ளார்.
4. கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது தான் எனது அரசியல் நிலைப்பாடு- ரஜினிகாந்த்
கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது தான் எனது அரசியல் நிலைப்பாடு என ரஜினிகாந்த் கூறினார்.
5. நடிகர் விஜயின் எனர்ஜியின் ரகசியம் என்ன? வியக்கும் ஹிர்த்திக் ரோஷன்
நடிகர் விஜயின் எனர்ஜியின் ரகசியம் என்ன என வியந்து உள்ளார் பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன்