சினிமா செய்திகள்

மீண்டும், மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்றார் விஜய் + "||" + After IT Raid, Vijay took part in the master film shooting

மீண்டும், மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்றார் விஜய்

மீண்டும், மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்றார் விஜய்
வருமான வரி துறை விசாரணைக்குப் பின்னர் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார்.
நெய்வேலி,

விஜய் நடித்த ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். பட நிறுவன அலுவலகங்கள் மற்றும் சினிமா பைனான்சியர் மதுரை அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நெய்வேலியில் நடந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை விசாரணைக்கு வருமான வரித்துறையினர் அழைத்து வந்தனர். 

இரு தினங்களாக விஜய் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. 

வருமான வரித்துறை சோதனை நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றார். நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டதால் ரசிகர்கள், படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரபல நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
2. விஜய் பட நடிகை மாளவிகா மோகனன் சம்பளம் ரூ. 5 கோடி ?
தற்போது விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.
3. 46-வது பிறந்த நாள்:விஜய்யை வாழ்த்திய நடிகர் நடிகைகள்
நடிகர் விஜய்க்கு நேற்று 46வது பிறந்த நாள் ஆகும்.
4. நடிகர் விஜயின் மாஸ்டர் டிரைலர் மரண மாஸாக இருக்கும் - நடிகர் அர்ஜூன் தாஸ்
நடிகர் விஜயின் மாஸ்டர் டிரைலர் மரண மாஸாக இருக்கும் என நடிகர் அர்ஜூன் தாஸ் கூறி உள்ளார்.
5. ரசிகர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக ரூ 5000 செலுத்திய நடிகர் விஜய்!
நடிகர் விஜய் அவரது ரசிகர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.