சினிமா செய்திகள்

“அழவைக்கும் படங்கள் பிடிக்காது” -நடிகை தமன்னா + "||" + Don't like Movie that cry - Actress Tamanna

“அழவைக்கும் படங்கள் பிடிக்காது” -நடிகை தமன்னா

“அழவைக்கும் படங்கள் பிடிக்காது”  -நடிகை தமன்னா
நான் அழவைக்கிற படங்களை பார்க்க மாட்டேன் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.
தமன்னா நடிப்பில் கடந்த வருடம் கண்ணே கலைமானே, தேவி-2, பெட்ரோமாக்ஸ், ஆக்‌ஷன் ஆகிய 4 படங்கள் வந்தன. தற்போது போலோ சுதியான் என்ற இந்தி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- 

“சினிமா என்பது வினோதமான சாதனம். திரையில் எதையாவது சொல்லுங்கள். எதையாவது காட்டுங்கள். ஆனால் படத்தை பார்க்கிறவர்கள் இரண்டரை மணி நேரம் வெளி உலகத்தை மறந்து ஜாலியாக சந்தோஷமாக இருக்க வேண்டும். நான் அழவைக்கிற படங்களை பார்க்க மாட்டேன். அவற்றில் நடிக்கவும் விருப்பம் இருக்காது.

இது மாதிரி படங்கள் பார்க்கும்போது நமக்கு உள்ளேயே ஒரு எதிர்மறை உணர்வு வந்து விடும் என்ற பயம் ஏற்படும். நமது இதயமும் பாரமாகி விடும். மனது கலங்கி கண்ணீர் வரும். பெண்களை கேவலப்படுத்துவது மாதிரியான கதாபாத்திரங்களிலும் நான் நடிக்க மாட்டேன். சினிமாவை பற்றி நாம் ஏதாவது கற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை.

அது உற்சாகத்தை கொடுப்பது மாதிரியும், கஷ்டங்களை மறக்கிற மாதிரியும் இருக்க வேண்டும். படங்களில் சிறிய அறிவுரையும் இருக்க வேண்டும். கெட்ட விஷயங்களை திணிப்பது மாதிரியும், தெரியாதவர்களுக்கு கெட்ட  விஷயங்களை தெரியப்படுத்துவது மாதிரியும் படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.’‘

இவ்வாறு தமன்னா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. விசாகப்பட்டினம் விஷ வாயு சம்பவம் நெஞ்சை பதற வைத்து விட்டது - நடிகை தமன்னா
விசாகப்பட்டினம் விஷ வாயு சம்பவம் நெஞ்சை பதற வைத்து விட்டது என நடிகை தமன்னா கூறியுள்ளார்.
2. விலங்குகளைப்போல் கூண்டுக்குள் அடைபட்ட மனிதர்கள் - நடிகை தமன்னா
]விலங்குகளைப்போல் கூண்டுக்குள் மனிதர்கள் அடைபட்டுள்ளதாக நடிகை தமன்னா தெரித்துள்ளார்.
3. எனது ஊரடங்கு வாழ்க்கை இப்படி தான் உள்ளது - நடிகை தமன்னா
எனது ஊரடங்கு வாழ்க்கை இப்படி தான் உள்ளது என நடிகை தமன்னா நகைச்சுவையாக கூறியுள்ளார்.
4. நடிப்புக்கு அனுபவம் உதவுகிறது -தமன்னா
நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு அனுபவம் உதவுகிறது என்று நடிகை தமன்னா கூறினார்.