சினிமா செய்திகள்

திருமணத்துக்கு தயாராகும் நட்சத்திர ஜோடி + "||" + Getting ready for marriage Star couple

திருமணத்துக்கு தயாராகும் நட்சத்திர ஜோடி

திருமணத்துக்கு தயாராகும் நட்சத்திர ஜோடி
இந்தி நட்சத்திர ஜோடிகளான ஐஸ்வர்யாராய்-அபிஷேக்பச்சன் மற்றும் தீபிகா படுகோனே-ரன்வீர்சிங் ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்தார். இன்னொரு நட்சத்திர ஜோடியான அலியாபட்-ரன்பீர் கபூர் ஆகியோரும் திருமணத்துக்கு தயாராகிறார்கள்.

பிரபல இந்தி இயக்குனரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட்டின் மகள் அலியாபட். இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து கரண் ஜோகரின் ‘ஸ்டூடன்ட் ஆப் த இயர்’ என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஹைவே, டியர் ஜிந்தகி, ராஸி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.


அலியாபட்டும் பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து வந்தனர். பழம்பெரும் நடிகர் ரிஷிகபூரின் மகன்தான் ரன்பீர் கபூர். இவர் முதலில் தீபிகா படுகோனை காதலித்தார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன்பிறகு இந்தி நடிகை கத்ரினா கைப்புடன் காதல் ஏற்பட்டு அதுவும் தோல்வியில் முடிந்தது.

தற்போது அலியாபட்டை காதலித்து வருகிறார். இருவரும் பிரம்மாஸ்த்ரா என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். அலியாபட்-ரன்பீர் கபூர் திருமணத்தை முடிக்க இருவரின் பெற்றோர்களும் அவசரம் காட்டுகின்றனர். டிசம்பர் மாதம் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.