சினிமா செய்திகள்

மகளுடன் நடிக்கும் அருண் பாண்டியன் + "||" + Acting with daughter Arun Pandian

மகளுடன் நடிக்கும் அருண் பாண்டியன்

மகளுடன் நடிக்கும் அருண் பாண்டியன்
கடந்த நவம்பர் மாதம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் ஹெலன். தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து வந்தது.
மலையாளத்தில் வினித் சீனிவாசன் தயாரிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் ஹெலன். தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து வந்தது. நர்சிங் மாணவியான ஹெலனுக்கு வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது கனவு. அவரது தந்தைக்கு அது பிடிக்கவில்லை.


ஒருநாள் காதலருடன் ஹெலன் வெளியே சென்று திரும்பும்போது போலீசார் தடுத்து நிறுத்தி, காதலன் மது அருந்தி இருந்ததால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்கின்றனர். இந்த தகவலை அறிந்த தந்தை ஹெலனிடம் கோபப்பட்டு அவரோடு பேசுவதை நிறுத்துகிறார். இதனால் வேதனையில் ஹெலன் மாயமாகிறாள். அவரை தந்தை தேடி அலைகிறார். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஹெலன் என்ன ஆனாள் என்பது கதை. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெரிய போட்டிக்கு நடுவில் நடிகர் அருண் பாண்டியன் வாங்கி இருக்கிறார். தமிழ் பதிப்பில் அருண் பாண்டியனும், அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் மூலம் அருண் பாண்டியன் மீண்டும் நடிக்க வருகிறார். கீர்த்தி பாண்டியன் தும்பா படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கி பிரபலமான கோகுல் டைரக்டு செய்கிறார். இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.