சினிமா செய்திகள்

இறுதி கட்டத்தில் விஜய் படப்பிடிப்பு + "||" + In the final stage Vijay shooting

இறுதி கட்டத்தில் விஜய் படப்பிடிப்பு

இறுதி கட்டத்தில் விஜய் படப்பிடிப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து வருகிறார். டெல்லி, கர்நாடகா போன்ற இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது நெய்வேலியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
வருமான வரித்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யிடம் விசாரணை நடத்தியதோடு அவரை சென்னைக்கு அழைத்து வந்ததால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது.

விசாரணை முடிந்ததும் விஜய் உடனடியாக நெய்வேலிக்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஓரிரு நாட்களில் அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்புகிறார்கள். அதன்பிறகு விடுபட்ட சில காட்சிகளை சென்னையிலேயே படமாக்குகின்றனர். இந்த மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிவடைகிறது.


அடுத்த மாதம் பாடல் வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விழாவில் வருமான வரி சோதனை உள்ளிட்ட விவரங்கள் குறித்து விஜய் தனது கருத்தை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள். மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக வருகிறார்.

விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கிறார்கள். விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்றும், நீட் தேர்வு பாதிப்புகளை பற்றிய கதையம்சத்தில் தயாராகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.