சினிமா செய்திகள்

3 புதிய படங்களில் தனுஷ் + "||" + Dhanush in 3 new films

3 புதிய படங்களில் தனுஷ்

3  புதிய  படங்களில்  தனுஷ்
நடிகர் தனுஷ் கைவசம் 3 படங்கள் உள்ளன.
தனுஷ் நடித்த பட்டாஸ் படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. தற்போது 3 படங்கள் அவர் கைவசம் உள்ளன. இதில் ஒரு படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி, ஹாலிவுட் நடிகர் காஸ்மோ ஆகியோரும் உள்ளனர். 

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் 64 நாட்கள் நடந்தது. தொடர்ந்து ராஜஸ்தான், மதுரை ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பை நடத்தினர். ராமேசுவரத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்தது. தற்போது அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டது. படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வருகிறார்கள். 

இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. சுருளி என்ற பெயரை தேர்வு செய்து இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். இந்த நிலையில் படத்தின் தலைப்பையும், முதல் தோற்ற போஸ்டரையும் வருகிற 19–ந்தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. 

அடுத்து பரியேறும் பெருமாள் படத்தை எடுத்து பிரபலமான மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க தனுஷ் தயாராகி உள்ளார். இந்த படத்துக்கு கர்ணன் என்று பெயர் வைத்துள்ளனர். இது சிவாஜி கணேசன் படம் பெயர் என்பதால் இந்த தலைப்பை பயன்படுத்த சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த படத்தை முடித்து விட்டு கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.