விக்னேஷ் சிவன் டைரக்‌ஷனில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா-சமந்தா!


விக்னேஷ் சிவன் டைரக்‌ஷனில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா-சமந்தா!
x
தினத்தந்தி 11 Feb 2020 10:18 AM GMT (Updated: 2020-02-11T15:48:40+05:30)

விஜய் சேதுபதி இப்போது விஜய்யுடன் இணைந்து, ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தில் அவருக்கு வில்லன் வேடம்.

வில்லன் வேடத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரித்விகா, மேகா ஆகாஷ் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை அடுத்து அவர், ‘துக்ளக் தர்பார்’ என்ற படத்திலும், ‘லாபம்’ என்ற படத்திலும் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் இன்னொரு படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். விக்னேஷ் சிவன் டைரக்டு செய்கிறார். இவருடைய டைரக்‌ஷனில், நயன்தாரா ஜோடியாக ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் விஜய் சேதுபதி ஏற்கனவே நடித்து இருக்கிறார்.

அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் கூட்டணி, மேலும் ஒரு படத்தில் இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், இந்த படத்தை பிரமாண்டமான முறையில், லலித்குமார் தயாரிக்கிறார். படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்குகிறது.

Next Story