வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் ஆடிட்டர் விசாரணைக்கு ஆஜர்


வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் ஆடிட்டர் விசாரணைக்கு ஆஜர்
x
தினத்தந்தி 11 Feb 2020 4:15 PM GMT (Updated: 2020-02-11T21:45:35+05:30)

நடிகர் விஜய் மற்றும் பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் ஆடிட்டர்கள் சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர்.

சென்னை,

நடிகர் விஜய் மற்றும் பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் ஆடிட்டர்கள் சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில்  நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 

பிகில் படத்தில் வாங்கிய சம்பளம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் அண்மையில், வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story