சினிமா செய்திகள்

பணம் பறிக்க முயற்சி புகார்: நடிகை லீனா மரியாவுக்கு நோட்டீஸ் + "||" + Notice to actress Lena Maria

பணம் பறிக்க முயற்சி புகார்: நடிகை லீனா மரியாவுக்கு நோட்டீஸ்

பணம் பறிக்க முயற்சி புகார்:  நடிகை லீனா மரியாவுக்கு நோட்டீஸ்
நடிகை லீனா மரியா தன்னிடம் 2 பேர் பணம் பறிக்க முயன்றதாக புகார் அளித்துள்ளார்.
தமிழில் கார்த்தியுடன் பிரியாணி படத்தில் நடித்தவர் லீனா மரியா பால். மெட்ராஸ் கபே என்ற இந்தி படத்தில் ஜான் ஆபிரகாமுடன் நடித்து இருந்தார். மலையாளத்தில் ரெட் சில்லீஸ், ஹஸ்பண்ட்ஸ் இன் கோவா ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். கொச்சியில் சொந்தமாக அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

லீனா மரியா பால் தனது காதலருடன் சேர்ந்து சென்னை அம்பத்தூரில் உள்ள வங்கியில் போலி ஆவணம் மூலம் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் லீனா மரியா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஐதராபாத்தை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி சாம்பசிவராவ் தன்னிடம் சி.பி.ஐ அதிகாரிகள் என்று கூறி 2 பேர் பணம் பறிக்க முயன்றதாக புகார் அளித்தார்.

இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை அடையாளம் கண்டனர். அவர்கள் நடிகை லீனா மரியா பால் மற்றும் அவரது காதலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து லீனா மரியா பாலின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சி.பி.ஐ அதிகாரிகள் பல முறை அழைப்பு விடுத்தும் லீனா மரியா வரவில்லை. இதையடுத்து அவர் வெளிநாடுகளுக்கு தப்பிவிடாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.