சினிமா செய்திகள்

ஆஸ்கார் விருது பெற்ற கொரிய படம் விஜய் படத்தின் ‘காப்பி’யா? + "||" + Oscar-winning Korean film

ஆஸ்கார் விருது பெற்ற கொரிய படம் விஜய் படத்தின் ‘காப்பி’யா?

ஆஸ்கார் விருது பெற்ற கொரிய படம் விஜய் படத்தின் ‘காப்பி’யா?
சர்வதேச அளவில் வழங்கப்படும் உயரிய ஆஸ்கார் விருதை கொரிய படமான ‘பாராசைட்’ தட்டி சென்றுள்ளது.
ஆஸ்கார் வரலாற்றில் ஆங்கிலம் அல்லாத பிறமொழி படம் சிறந்த படத்துக்கான விருதை பெற்று இருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞன் பணக்கார வீட்டில் வேலைக்கு சேர்கிறான். பின்னர் அந்த குடும்பத்தினரை ஏமாற்றி தனது தாய், தந்தை, தங்கையை அங்கு வேலைக்கு சேர்த்து தில்லுமுல்லு செய்வதுபோன்ற கதைக்களத்தில் இந்த படம் தயாராகி உள்ளது. ஆஸ்கார் விருதை வென்ற பாராசைட் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

இந்த நிலையில் பாராசைட் படம் விஜய் நடித்த மின்சார கண்ணா படத்தின் காப்பி என்று சமூக வலைத் தளத்தில் தகவல் பரவி வருகிறது.

1999-ல் வெளியான மின்சார கண்ணா படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். ரம்பா, குஷ்பு, மோனிகா கோஸ்டலினோ ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

பாராசைட், மின்சார கண்ணா ஆகிய 2 படங்களின் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதாக விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சிலர் மின்சார கண்ணாவின் காப்பி படத்துக்கு ஆஸ்கார் விருது வழங்கி இருப்பதாக கேலி பதிவுகளையும் வெளியிட்டுள்ளனர்.