குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்


குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
x
தினத்தந்தி 14 Feb 2020 3:45 AM GMT (Updated: 2020-02-13T16:43:20+05:30)

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான சுசீந்திரன் தொடர்ந்து ‘நான் மகான் அல்ல,’ ‘வெண்ணிலா கபடிக்குழு-2,’ ‘கென்னடி கிளப்,’ ‘சாம்பியன்’ உள்பட பல படங்களை டைரக்டு செய்தார்.

புதுமுகங்கள் நடித்துள்ள ‘ஏஞ்சலினா’ என்ற புதிய படத்தை அவர் டைரக்டு செய்து இருக்கிறார். இந்த படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், சுசீந்திரன் டைரக்டு செய்ய இருக்கும் அடுத்த படத்தில், விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க சம்மதித்து இருக்கிறார். சுசீந்திரன் சொன்ன ஒரு கதை விக்ரம் பிரபுவுக்கு பிடித்து இருப்பதாக தெரிகிறது.

குடும்ப கதையம்சம் கொண்ட படம், இது. தாய் சரவணன் தயாரிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. கதாநாயகி, மற்றும் நடிகர்-நடிகைகள் முடிவாகவில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

Next Story