சினிமா செய்திகள்

மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’ + "||" + With Madhavan-Anushka, Silence

மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’

மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
‘ரெண்டு’ படத்தில் ஜோடி சேர்ந்த மாதவன்-அனுஷ்கா அதன் பிறகு எந்த படத்திலும் ஜோடி சேரவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பின் இருவரும் ‘சைலன்ஸ்’ என்ற படத்தில் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள்.
‘சைலன்ஸ்’ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி இருக்கிறது. ஹேமந்த் மதுக்கர் கதை எழுதி டைரக்டு செய்ய, டி.ஜி.விஷ்வபிரசாத், கோனா வெங்கட் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.

படத்தை பற்றி ஹேமந்த் மதுக்கர் கூறியதாவது:-

‘‘அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாழ்க்கையை கருவாக கொண்ட படம், இது. அங்கு நடைபெறும் ஒரு குற்ற சம்பவம், ஒவ்வொருவரின் வாழ்வையும் எப்படி புரட்டிப் போடுகிறது? என்பதே படத்தின் கதை. வாய் பேச முடியாத-காது கேட்காத பெண்ணாக அனுஷ்கா நடித்து இருக்கிறார்.

இதுவரை பார்த்திராத புதிய கோணத்தில் எதிர்பாராத சம்பவங்கள், திருப்பங்களுடன் திகில் மிகுந்த படமாக தயாராகி இருக்கிறது. மாதவன்-அனுஷ்கா ஜோடியுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். பெரும்பகுதி காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளன. வருகிற ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வரும்.’’

தொடர்புடைய செய்திகள்

1. துபாய் தொழில் அதிபரை மணக்கும் அனுஷ்கா?
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அனுஷ்கா திருமணம் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தன.