மாஸ்டர் படத்தில் விஜய் பாடியுள்ள முதல் பாடல் வெளியானது


மாஸ்டர் படத்தில் விஜய் பாடியுள்ள முதல் பாடல் வெளியானது
x
தினத்தந்தி 14 Feb 2020 1:09 PM GMT (Updated: 2020-02-14T18:39:31+05:30)

மாஸ்டர் படத்தில் விஜய் பாடியுள்ள 'ஒரு குட்டி கத' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியானது.

சென்னை,

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார் . இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கிறார்கள். 

விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்றும், நீட் தேர்வு பாதிப்புகளை பற்றிய கதையம்சத்தில் தயாராகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. 

இந்நிலையில்,  நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும்  மாஸ்டர் திரைப்படத்தின் முதல் பாடல் 'ஒரு குட்டி கத' காதலர் தினமான இன்று வெளியாகியுள்ளது.  

விஜய் பாடியுள்ள 'ஒரு குட்டி கத' எனத் தொடங்கும் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள். 

Next Story