சினிமா செய்திகள்

ஜெயலலிதாவை தள்ளிவிட்ட சம்பவம்? ‘தலைவி’ படத்தில் அரசியல் காட்சிகள் + "||" + Political scenes in the thalaivi movie

ஜெயலலிதாவை தள்ளிவிட்ட சம்பவம்? ‘தலைவி’ படத்தில் அரசியல் காட்சிகள்

ஜெயலலிதாவை தள்ளிவிட்ட சம்பவம்?  ‘தலைவி’ படத்தில் அரசியல் காட்சிகள்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது.
தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்தசாமியும் நடிக்கின்றனர். கங்கனா ரணாவத் பரதநாட்டியம் கற்று நடித்து வருகிறார். விஜய் டைரக்டு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. கங்கனா ரணாவத், அரவிந்தசாமி தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. தலைவி படம் வருகிற ஜூன் மாதம் 26-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

ஜெயலலிதாவின் இளமை கால வாழ்க்கை, சினிமாவில் அறிமுகமானது, அரசியல் சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய சம்பவத்தை தற்போது படமாக்கி வருகிறார்கள். எம்.ஜி.ஆர். மறைந்ததும் அவரது உடல் சென்னை ராஜாஜி ஹாலில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் எம்.ஜி.ஆர். உடலை அலங்கரித்த வண்டியில் கடற்கரைக்கு எடுத்து சென்றபோது உடலின் அருகில் நின்றிருந்த ஜெயலலிதாவை கீழே இறக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. வண்டியில் இருந்து ஜெயலலிதாவை தள்ளிவிட்டதாக குற்றம்சாட்டினர்.

அந்த சம்பவத்தை ராஜாஜி ஹாலில் அரங்குகள் அமைத்து படமாக்கி  வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.