சினிமா செய்திகள்

24 மணி நேரத்தில் விஜயின் குட்டி கதை பாடலுக்கு "90 லட்சம் பார்வைகள் 10 லட்சம் லைக்குகள் " + "||" + 9 MILLION real-time views and 1 MILLION likes in 24 HOURS Thalapathy's KuttiStory

24 மணி நேரத்தில் விஜயின் குட்டி கதை பாடலுக்கு "90 லட்சம் பார்வைகள் 10 லட்சம் லைக்குகள் "

24 மணி நேரத்தில் விஜயின் குட்டி கதை பாடலுக்கு "90 லட்சம் பார்வைகள் 10 லட்சம் லைக்குகள் "
24 மணி நேரத்தில் விஜயின் மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடல் பெற்ற பார்வைகள் மற்றும் லைக்குகள் விவரத்தை சோனி நிறுவனம் அறிவித்து உள்ளது.
சென்னை

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார் . இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து  வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன்தாஸ் உள்பட லர் நடிக்கிறார்கள். 

விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்றும், நீட் தேர்வு பாதிப்புகளை பற்றிய கதையம்சத்தில் தயாராகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. 

இந்நிலையில்,  நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும்  மாஸ்டர் திரைப்படத்தின் முதல் பாடல் 'ஒரு குட்டி கதை' காதலர் தினமான நேற்று  வெளியானது.  

விஜய் பாடியுள்ள 'ஒரு குட்டி கதை' எனத் தொடங்கும் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பாடல் 24 மணி நேரத்தில் பெற்ற பார்வைகள் மற்றும லைக்ஸ்களை சோனி நிறுவனம் வெளியிட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது -கொரோனா விழிப்புணர்வுப் பாடல்
அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது கொரோனா விழிப்புணர்வுப் பாடலில் இணைந்த வைரமுத்து எஸ்.பி. பால சுப்பிரமணியம்
2. எனது கருத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர்களுக்கு நன்றி -ரஜினிகாந்த்
எனது கருத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி! என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.
3. ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அவருக்கும் தெரியாது, இறைவனுக்கும் தெரியாது - நடிகர் வடிவேலு
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது என்று நடிகர் வடிவேலு கிண்டலாக கூறியுள்ளார்.
4. கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது தான் எனது அரசியல் நிலைப்பாடு- ரஜினிகாந்த்
கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது தான் எனது அரசியல் நிலைப்பாடு என ரஜினிகாந்த் கூறினார்.
5. நடிகர் விஜயின் எனர்ஜியின் ரகசியம் என்ன? வியக்கும் ஹிர்த்திக் ரோஷன்
நடிகர் விஜயின் எனர்ஜியின் ரகசியம் என்ன என வியந்து உள்ளார் பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன்