முன்னாள் காதலருடன் நடிகை சனாகான் மீண்டும் மோதல்


முன்னாள் காதலருடன் நடிகை சனாகான் மீண்டும் மோதல்
x
தினத்தந்தி 17 Feb 2020 12:27 AM GMT (Updated: 2020-02-17T05:57:56+05:30)

தமிழில் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனாகான். இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இவரும் நடன இயக்குனர் மெல்வின் லூயிசும் காதலித்தனர். தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இதுகுறித்து சனாகான் கூறும்போது, “நான் காதலித்த மெல்வின் ஏமாற்றுக்காரர். மோசடி பேர்வழி. நடிகைகள் உள்ளிட்ட சில பெண்களிடமும் அவருக்கு தகாத தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சியானேன். அவரது சுயரூபம் தெரிந்து காதலை முறித்துக்கொண்டேன்.” என்றார்.

இந்த நிலையில் மெல்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சனாகானை மறைமுகமாக சாடி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவள் அழைக்கிறாள். போய்விடாதே என்ற வாசகம் எழுதிய பனியனை அணிந்திருந்தார். குரலும் ஒலிக்கிறது. இதற்கு பதிலடியாக சனாகானும் தனது இன்ஸ்டாகிராமில் அவள் அழைக்கிறாள் போய்விடாதே என்று பதிவிடுகின்றனர். உண்மையில் அழைப்பதற்கு யாரும் இல்லை என்று மீம்ஸ் போட்டுள்ளார்.

இதையடுத்து மெல்வின் பொய்யாக இந்தி நகைச்சுவை நடிகர் ஜானி லீவர் அழுவதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டார். இதற்கும் சனாகான் பதிலடியாக ஓட்டலில் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “உங்கள் பாய் பிரண்டை விட, வெயிட்டர் அழகாக இருக்கும்போது” என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளார். இவர்களின் சமூக வலைத்தள மோதல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story