தடைகளை கடந்து திரைக்கு வரும் திரிஷா படம்


தடைகளை கடந்து திரைக்கு வரும் திரிஷா படம்
x
தினத்தந்தி 17 Feb 2020 12:36 AM GMT (Updated: 2020-02-17T06:06:07+05:30)

திரிஷாவுக்கு 96 படம் பெயர் வாங்கி கொடுத்தது. தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

திருஞானம் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு பல்வேறு பிரச்சினைகளால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த படத்துக்கு பரம பதம் என்று பெயர் வைத்து இருந்தனர். பின்னர் பரம பதம் விளையாட்டு என்று மாற்றினர்.

இதில் திரிஷா டாக்டராகவும் ஒரு குழந்தைக்கு தாயாகவும் நடித்து இருக்கிறார். திகில் படமாக தயாராகி உள்ளது. திரிஷா வேலை பார்க்கும் மருத்துவமனையில் ஒரு அரசியல்வாதி கொலை செய்யப்படுகிறார். அந்த கொலைக்கு திரிஷா சாட்சியாக வருவதும் இதனால் அவருக்கு ஏற்படும் ஆபத்துகளும் கதை.

இந்த படம் கடந்த வருடமே திரைக்கு வருவதாக இருந்தது. பின்னர் ஜனவரி 31-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். அப்போதும் படம் வெளியாகவில்லை. வருகிற 28-ந்தேதி திரைக்கு வரும் என்று தற்போது அறிவித்து உள்ளனர். இந்த படத்தை நடிகை நமீதா பாராட்டி உள்ளார். ஒவ்வொரு நடிகையும் பரமபதம் விளையாட்டு படத்தில் திரிஷா நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் சரவணன் இயக்கும் ராங்கி படத்தில் திரிஷா நடித்து முடித்துள்ளார். இந்த படமும் விரைவில் திரைக்கு வருகிறது. தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Next Story