சினிமா செய்திகள்

விஜய் படத்தின் ‘காப்பி’ என்று சர்ச்சை ஆஸ்கார் விருது படம் மீது வழக்கு? + "||" + Controversy over Vijay copy Case over Oscar award movie

விஜய் படத்தின் ‘காப்பி’ என்று சர்ச்சை ஆஸ்கார் விருது படம் மீது வழக்கு?

விஜய் படத்தின் ‘காப்பி’ என்று சர்ச்சை ஆஸ்கார் விருது படம் மீது வழக்கு?
ஆஸ்கார் விருது பெற்ற ‘பாரசைட்’ கொரிய படம் தமிழில் விஜய் நடிப்பில் வந்த மின்சார கண்ணா படத்தின் காப்பி போல் இருப்பதாக சர்ச்சை கிளம்பி உள்ளது.
பணக்கார வீட்டில் பொய் சொல்லி வேலைக்கு சேரும் இளைஞனை அந்த குடும்பத்தை சேர்ந்த பெண் காதலிக்கிறாள். மேலும் சில பொய்களை சொல்லி தனது தாய், தந்தை, தங்கையை அதே வீட்டில் வேலைக்கு சேர்த்து விடுகிறான். அங்கு சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். அப்போது சிக்கலும் வருகிறது. இது பாரசைட் படத்தின் கதை.


மின்சார கண்ணா படத்தில் வசதியான குடும்பத்தை சேர்ந்த குஷ்புவின் தங்கையை விஜய் காதலிக்கிறார். பின்னர் அந்த குடும்பத்தில் பாதுகாவலராக வேலைக்கு சேர்கிறார். தனது குடும்பத்தினரையும் அதே வீட்டில் பொய் சொல்லி வேலைக்கு சேர்த்து விடுகிறார். குஷ்புவின் தங்கையை விஜய் கைப்பிடித்தாரா? என்பது கதை.

இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். தேனப்பன் தயாரித்தார். பாரசைட் கதை மின்சார கண்ணா படத்தை போல் உள்ளதே என்று கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டபோது, அப்படியொரு கதையை 20 வருடங்களுக்கு முன்பே நான் தேர்வு செய்ததை நினைத்து மகிழ்கிறேன். இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் தேனப்பன்தான் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

தேனப்பன் அளித்த பேட்டியில் இந்த பிரச்சினை வெளிநாட்டு விவகாரம் என்பதால் அதற்குரிய வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். இதுகுறித்த எனது முடிவை விரைவில் வெளியிடுவேன் என்றார். வழக்கு தொடர அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.