சினிமா செய்திகள்

சைக்கோ திரில்லர் கதையில் பிரபுதேவாவின் மிரட்டல் தோற்றம் + "||" + Prabhu Deva's intimidating appearance

சைக்கோ திரில்லர் கதையில் பிரபுதேவாவின் மிரட்டல் தோற்றம்

சைக்கோ திரில்லர் கதையில்  பிரபுதேவாவின் மிரட்டல் தோற்றம்
பஹிரா படத்தில் பிரபுதேவாவின் சைக்கோ திரில்லர் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிரபுதேவா நடிப்பில் கடந்த வருடம் சார்லி சாப்ளின்-2, தேவி-2 படங்கள் வந்தன. கடந்த மாதம் இந்தியில் நடித்த ஸ்டீரீட் டான்சர் படமும் வெளியானது. போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள பொன்மாணிக்கவேல் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்தியில் சல்மான்கானை வைத்து பிரபுதேவா இயக்கிய தபாங்-3 டிசம்பர் மாதம் வெளியானது. தற்போது மீண்டும் சல்மான்கான் நடிக்கும் ராதே படத்தை இயக்கி வருகிறார். காதலை தேடி நித்யா நந்தா என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவும் பிரபுதேவாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த படத்துக்கு பஹிரா என்று தலைப்பு வைத்துள்ளனர். சைக்கோ திரில்லர் கதையம்சத்தில் தயாராகிறது. படத்தில் பிரபுதேவா தோற்றத்தை  படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மொட்டை தலையில் மிரட்டலாக  இருக்கிறார். இந்த தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதில் அமைரா தஸ்தர் நாயகியாக நடிக்கிறார். படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் கூறும்போது, “தி ஜங்கிள் புக் காமிக்ஸ் கதையில் வரும் கருஞ்சிறுத்தையின் பெயர்தான் பஹிரா. அந்த கதையில் வரும் நாயகன் பாத்திரமான மோக்ளியை பாடுபட்டு காப்பாற்றும். அந்த குணாதிசயங்களோடு பிரபுதேவா நடிக்கிறார். படத்தில் பல திருப்பங்கள் இருக்கும். பிரபுதேவாவை இதுவரை பார்த்திராத வித்தியாசமான தோற்றத்தில் காணலாம்” என்றார்.