தெலுங்கில் சிவகார்த்திகேயன் படம்


தெலுங்கில் சிவகார்த்திகேயன் படம்
x
தினத்தந்தி 17 Feb 2020 10:45 PM GMT (Updated: 2020-02-18T03:57:32+05:30)

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.

ஆந்திரா, தெலுங்கானாவில் தமிழ் படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. தெலுங்கு நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவிக்கின்றன. இதனால் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் தெலுங்கு மொழியிலும் வெளியிடுகிறார்கள்.

தற்போது சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தையும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். இந்த படத்தை இரும்புத்திரை படத்தை எடுத்து பிரபலமான மித்ரன் இயக்கினார். நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் அர்ஜுன், இந்தி நடிகர் அபய் தியோல், இவானா ஆகியோரும் நடித்து இருந்தனர். அறிவியல் கண்டுபிடிப்புகளில் சாதிக்கும் மாணவர்களின் திறமை எப்படி அழிக்கப்படுகிறது என்ற திரைக்கதையில் தயாராகி இருந்தது.

இதில் சிவகார்த்திகேயன் சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் வந்தார். இந்த படத்துக்கு தெலுங்கில் சக்தி என்று பெயர் வைத்துள்ளனர். எல்லா மொழிக்குமான கதை என்பதால் தெலுங்கில் வெளியிடுகிறோம் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.

Next Story