சினிமா செய்திகள்

விவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம் + "||" + Vivek's vellai pookkal Part 2

விவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்

விவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்
விவேக்கின் வெள்ளைப்பூக்கள் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.
தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வந்து வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினிகாந்தின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா இரண்டாம் பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படம் 3 பாகங்கள் வெளியானது. சாமி, சண்டக்கோழி, மாரி, கலகலப்பு, காஞ்சனா, திருட்டுப்பயலே உள்ளிட்ட மேலும் பல படங்களின் 2-ம் பாகங்கள் வந்தன.

தற்போது இந்தியன், சதுரங்க வேட்டை ஆகிய படங்களின் 2-ம் பாகங்கள் தயாராகி வருகிறது. விஜய்யின் துப்பாக்கி, அஜித்குமாரின் வேதாளம் படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் யோசனையும் உள்ளது. இந்த நிலையில் விவேக்கின் வெள்ளைப்பூக்கள் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.

இந்த படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. விவேக் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அமெரிக்காவில் இருக்கும் மகன் வீட்டுக்கு செல்லும் விவேக் அங்கு நடக்கும் மர்ம கொலைகளை துப்பு துலக்கி குற்றவாளிகளை எப்படி கண்டு பிடிக்கிறார் என்பது கதை.

பெரும்பகுதி படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்தி இருந்தனர். விவேக் இளங்கோவன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதும் பணியில் இயக்குனர் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த பணிகள் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் நடிகர் விவேக் கூறினார்.