சினிமா செய்திகள்

இந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ் + "||" + Release 6 Movies this week

இந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்

இந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்
இந்த வாரம் வருகிற வெள்ளிக்கிழமை கன்னி மாடம், மாபியா, காட்பாதர், மீண்டும் ஒரு மரியாதை, பாரம், குட்டி தேவதை ஆகிய 6 படங்கள் திரைக்கு வருகின்றன.
மாபியா படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் நாயகியாகவும், பிரசன்னா வில்லனாகவும் வருகிறார்கள். கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார்.

அதிரடி படமாக தயாராகி உள்ளது. அருண் விஜய்க்கு இது முக்கிய ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மீண்டும் ஒரு மரியாதை படத்தை பாரதிராஜா நடித்து இயக்கி உள்ளார். இதில் நாயகியாக நக்‌ஷத்திரா வருகிறார். ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோரும் உள்ளனர்.

வயதான எழுத்தாளர் தனது மகனை பார்க்க அமெரிக்கா செல்கிறார். அங்கு தற்கொலைக்கு முயலும் இளம் பெண்ணை காப்பாற்றுகிறார். தன்னுடன் அழைத்து சென்று வாழ்க்கையின் அழகை அவர் ரசிக்க வைப்பதும், இதனால் இருவருக்கும் ஏற்படும் உறவையும் பற்றிய கதை. தற்கொலை முடிவுகளுக்கு எதிரான கதையம்சத்தில் எடுத்துள்ளனர்.

‘பாரம்’ மத்திய அரசின் தேசிய விருது பெற்ற படம். குடும்பத்தால் கவனிக்கப்படாமல் விடப்படும் ஒரு முதியவரை பற்றிய கதை. பிரியா கிருஷ்ணசாமி இயக்கி உள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெற்றி மாறன் தனது பட நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார். கன்னிமாடம் படத்தை போஸ் வெங்கட் இயக்கி உள்ளார். புதுமுகங்கள் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாகவும், சாயா தேவி நாயகியாகவும் நடித்துள்ளனர். காட்பாதர் படத்தில் நட்டி நடராஜ்-அனன்யா ஜோடியாக நடித்துள்ளனர்.