சினிமா செய்திகள்

சொந்த குரலில் விஜய் மீண்டும் பாடினார்! + "||" + Vijay sings again in his own voice!

சொந்த குரலில் விஜய் மீண்டும் பாடினார்!

சொந்த குரலில் விஜய் மீண்டும் பாடினார்!
பிரபல கதாநாயகர்களில் விஜய், தனுஷ், சிம்பு ஆகிய மூன்று பேரும் சொந்த குரலில் பாடும் திறமை கொண்டவர்கள்.
இவர்களில் நிறைய படங்களில் பாடியிருப்பவர், விஜய். விஷ்ணு, தேவா, சச்சின், பத்ரி, புலி, ஜில்லா, தலைவா, கத்தி, தெறி, பிகில் என அவர் பாடிய படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

சூர்யா கதாநாயகனாக நடித்த ‘பெரியண்ணா’ படத்தில், நட்புக்காக விஜய் பாடினார். அவர் கடந்த 25 வருடங்களாக சொந்த குரலில் பாடி வருகிறார். எல்லா பிரபல இசையமைப்பாளர் களின் இசை யிலும் அவர் பாடியிருக்கிறார்.

‘பிகில்’ படத்தை அடுத்து அவர் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’ படத்துக்காக, “ஒரு குட்டி கதை” என்று தொடங்கும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். விஜய் பாடலுக்கு அனிருத் இசையமைத்தார். இந்த படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக் கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக் கிறார். ஆண்ட்ரியா, சாந்தனு, அழகம் பெருமாள் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்கிறார். சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். படம், ஏப்ரல் மாதம் வெளிவர இருக்கிறது.