சினிமா செய்திகள்

‘பாயும் ஒளி நீ எனக்கு’: ‘சஸ்பென்ஸ்’ கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு + "||" + The flowing light for me: Vikram Prabhu in suspense role

‘பாயும் ஒளி நீ எனக்கு’: ‘சஸ்பென்ஸ்’ கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு

‘பாயும் ஒளி நீ எனக்கு’: ‘சஸ்பென்ஸ்’ கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு நடித்த ‘வானம் கொட்டட்டும்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து அவர் ஒரு புதிய படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். இந்த படத்துக்கு, ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
படத்தை டைரக்டு செய்பவர், கார்த்திக் சவுத்ரி. இவர், அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பான படிப்பை படித்து முடித்தவர். பிரபல தெலுங்கு டைரக்டர் ஒருவரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர். ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகிய இருவரின் தெலுங்கு படங்களிலும் பணிபுரிந்து இருக்கிறார்.

படத்தை பற்றி இவர் சொல்கிறார்:-

“இது, அதிரடியான சண்டை காட்சிகள் நிறைந்த படம். கதாநாயகன் விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரம், ‘சஸ்பென்ஸ்’ ஆக வைக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி ஒருவர் நடிப்பார். பாலுமகேந்திராவின் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற சுரேஷ் பார்கவ் ஒளிப்பதிவு செய்கிறார். மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர், இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது. முக்கிய காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.”