3 மொழிகளில் தயாரான பிரபு சாலமன் படம்


பிரபு சாலமன்
x
பிரபு சாலமன்
தினத்தந்தி 18 Feb 2020 6:32 AM GMT (Updated: 18 Feb 2020 6:32 AM GMT)

ஈரோஸ் இண்டர்நேஷனல் தயாரிக்க, பிரபு சாலமன் டைரக்‌ஷனில், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில், ஒரு படம் தயாராகி வருகிறது.

இதில் கதாநாயகனாக ராணா தக்குபதி நடிக்க, முக்கிய வேடத்தில் விஷ்ணு விஷால் நடித்து இருக்கிறார். இந்த படத்துக்கு தமிழில், ‘காடன்’ என்றும், தெலுங்கில், அரண்யா என்றும், இந்தியில், ‘ஹாத்தி மேரே சாத்தி’ என்றும் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாராகி இருக்கிறது. மனிதனுக்கும், யானைக்குமான ஆழமான உறவை உணர்வுப்பூர்வமாக, நெஞ்சம் நெகிழத்தக்க வகையில் படம் எடுத்துரைக்கிறது. படத்தை பற்றி டைரக்டர் பிரபு சாலமன் கூறியதாவது:-

“அசாம் மாநிலம் காசிரங்காவில் யானைகளின் வசிப்பிடத்தை மனிதர்கள் ஆக்கிரமித்த சம்பவத்தை மையமாக கொண்ட கதை இது.

காட்டையும், அதன் விலங்குகளையும் பாதுகாக்கும் ஒரே நோக்கத்தோடு தான் வாழ்ந்த அர்ப்பணிப்பு வாழ்வின் அடித்தளத்தை ஆக்கிரமிப்பு குணம் கொண்ட மனிதர்களின் முயற்சிகள் சீர்குலைக்க முயற்சிக்கும் போது காட்டையும், விலங்குகளையும் மீட்டெடுக்க முற்படும் யானைகளின் போராட்டத்தை மையப்புள்ளியாக கொண்ட படம்.

சுற்றுச்சூழல் குறித்த எந்த ஒரு அறிதலும், புரிதலும் இல்லாமலே மனிதன் அதை கடந்து போவதையும், அதனை வளர்ச்சி என்ற பெயரில் ஆக்கிரமிப்பதையும், அழிப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறான். இந்த படம், சுற்றுச்சூழல் மற்றும் விலங்கினங்கள் எவ்வாறு மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக இருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தும்.”

Next Story