சினிமா செய்திகள்

வாழ்க்கை கதையை விரும்பும் காஜல் + "||" + Kajal likes life story

வாழ்க்கை கதையை விரும்பும் காஜல்

வாழ்க்கை கதையை விரும்பும் காஜல்
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் வாழ்க்கை கதையில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“எத்தனை படங்களில் நடித்து இருந்தாலும் இன்னும் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனாலும் நான் நடிக்காத கதாபாத்திரம் எங்கு இருக்கிறது என்று தேடுவது எனது வேலை இல்லை. அது இயக்குனர்கள், கதாசிரியர்கள் பொறுப்பு. நான் விரும்பும் கதாபாத்திரங்களை அவர்கள்தான் உருவாக்க வேண்டும்.

தொடர்ந்து புதிய கதைகள் தேடி வந்துகொண்டே இருக்கும். அதில் சரியானதை எட்டிப்பிடித்து கொள்ள வேண்டும். அந்த கதாபாத்திரங்களை சிற்பி செதுக்குவதுபோல் செதுக்க வேண்டும். அதற்கு இயக்குனரும் உதவி செய்வார். படங்களில் எனது சொந்த கருத்தையும் சேர்த்து கதாபாத்திரமாகவே மாறி நடிப்பேன்.

இப்போது வாழ்க்கை வரலாறு கதை படங்கள் அதிகம் தயாராகிறது. உலகத்துக்கு முன்னோடியாக இருந்த பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒவ்வொருவர் பின்னால் ஒரு கதை இருக்கும். அதை சினிமாவாக எடுத்தால் வரவேற்பு கிடைக்கும். நானும் அதுமாதிரி ஒரு வாழ்க்கை கதை படத்தில் நடிக்க விரும்பி காத்திருக்கிறேன்.

சவால் விடுகிற மாதிரி கதாபாத்திரம் அமைந்தால் வாழ்க்கை கதையில் நடிக்க தயாராக இருக்கிறேன். இத்தனை ஆண்டு அனுபவத்துக்கு ஏற்ற மாதிரியும் அந்த கதாபாத்திரம் இருக்க வேண்டும்.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.