சினிமா செய்திகள்

புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஒரு நிமிடம் பதற வைத்த நடிகை சிம்ரன் + "||" + Fans a minute Actress Simran

புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஒரு நிமிடம் பதற வைத்த நடிகை சிம்ரன்

புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஒரு நிமிடம் பதற வைத்த நடிகை சிம்ரன்
நடிகை சிம்ரன் ரத்த காயத்துடன் இருக்கும் புகைப்படமொன்றை வெளியிட்டு ரசிகர்களை ஒரு நிமிடம் பதற வைத்துவிட்டார்.
சென்னை,

தமிழில் 1990–களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் சிம்ரன். நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், பம்மல் கே.சம்பந்தம், கன்னத்தில் முத்தமிட்டால், ரமணா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். 2003–ல் தீபக் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு ஒதுங்கினார். இவர்களுக்கு அதீப், அதித் என்று 2 மகன்கள் உள்ளனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீப காலமாக சிம்ரன் மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார். சில படங்களில் கவுரவ தோற்றங்களில் வருகிறார். சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் வில்லியாக மிரட்டினார். பேட்ட படத்தில் முதல் தடவையாக ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு Mai Aur Meri KHWAISHEIN என்ற மியூசிக் வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்தார்.

தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது எனக்கூறி கால், மற்றும் நெத்தியில் ரத்த காயத்துடன் இருக்கும் புகைப்படமொன்றை வெளியிட்டு ரசிகர்களை ஒரு நிமிடம் பதற வைத்துவிட்டார். இந்த படத்தை பார்த்து உண்மையிலேயே நடிகை சிம்ரனுக்கு அடிப்பட்டு விட்டதோ என்று ரசிகர்கள் ஒரு நிமிடம் பதபதைப்பு அடைந்தனர். அதன்பிறகு தான் தெரிந்தது அது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அதன்பிறகு ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சி விட்டனர்.