அனுபமா பரமேஸ்வரனுடன் அதர்வா நடிக்கும் படத்தின் பெயர், ‘தள்ளிப்போகாதே’


அனுபமா பரமேஸ்வரனுடன் அதர்வா நடிக்கும் படத்தின் பெயர், ‘தள்ளிப்போகாதே’
x
தினத்தந்தி 21 Feb 2020 1:30 AM GMT (Updated: 2020-02-20T16:07:34+05:30)

‘ஜெயம் கொண்டான்,’ ‘கண்டேன் காதலை,’ ‘இவன் தந்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன், அடுத்து ஒரு புதிய படத்தை தயாரித்து டைரக்டு செய்து வந்தார்.

அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் இதில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்த இந்த படத்துக்கு இப்போது, ‘தள்ளிப்போகாதே’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. படத்தை பற்றி டைரக்டர் ஆர்.கண்ணன் கூறியதாவது:-

‘‘அதர்வாவின் அப்பா நடிகர் முரளிக்கு ‘இதயம்’ படம் பெயர் வாங்கி கொடுத்தது போல், அதர்வாவுக்கு ‘தள்ளிப்போகாதே’ படம் பெயர் வாங்கி கொடுக்கும். தமிழ் பட உலகில் காதல் காவியங்கள் என்று பேசப்படுகிற அளவுக்கு ‘மவுன ராகங்கள்,’ ‘நெஞ்சத்தை கிள்ளாதே,’ ‘96’ ஆகிய படங்கள் அமைந்தன. அந்த வரிசையில் இது, உணர்ச்சிகரமான காட்சிகளை கொண்ட காதல் படமாக இருக்கும்.

படப்பிடிப்பு ரஷ்யாவில் 20 நாட்கள் நடந்தது. நடிகர்-நடிகைகள் அனைவரும் மைனஸ் 10 டிகிரி குளிரை தாங்கிக்கொண்டு நடித்தார்கள். தொடர்ந்து சென்னையில், 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் ஏப்ரல் மாதம் கோடை விருந்தாக திரைக்கு வரும்.’’

Next Story