சினிமா செய்திகள்

‘அலாவுதீன்’ படத்தை அடுத்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தை மித்ரன் டைரக்டு செய்கிறார் + "||" + Mithran is directing a new movie starring Karthi

‘அலாவுதீன்’ படத்தை அடுத்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தை மித்ரன் டைரக்டு செய்கிறார்

‘அலாவுதீன்’ படத்தை அடுத்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தை மித்ரன் டைரக்டு செய்கிறார்
பாக்யராஜ் கண்ணன் டைரக்ஷனில் கார்த்தி நடித்து வந்த ‘அலாவுதீன்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இந்த படத்தில், கார்த்தி ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து இருக்கிறார்.
ரஷ்மிகா மந்தனா, தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். அடுத்து ஒரு படத்துக்கு சூர்யா ஜோடியாக பேசப்படுகிறார்.

‘அலாவுதீன்’ படத்தில் நடித்து முடித்த கார்த்தி அடுத்ததாக, மித்ரன் டைரக்ஷனில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். இந்த படத்தை லட்சுமண் தயாரிக்கிறார். இவர், ‘சிங்கம்-2,’ ‘தேவ்’ ஆகிய படங்களை தயாரித்தவர். படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது.