சினிமா செய்திகள்

‘பைக்’கில் சாகசம் செய்தபோது ‘வலிமை’ படப்பிடிப்பில் விபத்தில் சிக்கினார், அஜித் + "||" + While on a bike adventure, Ajith to involved in shooting accident

‘பைக்’கில் சாகசம் செய்தபோது ‘வலிமை’ படப்பிடிப்பில் விபத்தில் சிக்கினார், அஜித்

‘பைக்’கில் சாகசம் செய்தபோது ‘வலிமை’ படப்பிடிப்பில் விபத்தில் சிக்கினார், அஜித்
ஆபத்தான காட்சிகளை படமாக்கும்போது, ‘டூப்’ நடிகர்களை பயன்படுத்தாமல், ஒரிஜினலாக உயிரை பணயம் வைத்து நடிக்கும் துணிச்சல் மிகுந்தவர், அஜித்குமார்.
அஜித்குமார் இதுவரை பலமுறை விபத்தில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அவர் தற்போது, ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வினோத் டைரக்டு செய்கிறார். போனிகபூர் தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது.

அஜித்குமார், ‘பைக்’கில் சாகசம் செய்கிற காட்சியில், ‘டூப்’ நடிகரை பயன்படுத்தாமல், அவரே துணிச்சலாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போது, ‘பைக்’ சறுக்கியதால் அவர் விபத்தில் சிக்கினார். அஜித் கை, கால்களில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. அதைப்பார்த்து படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இருப்பினும் அஜித்குமார் படப்பிடிப்பை ரத்து செய்யாமல், தொடர்ந்து அந்த காட்சிகளில் நடித்து முடித்தார். அடுத்த நாள் படப்பிடிப்பிலும் முதல் ஆளாக வந்து கலந்து கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

1. ‘வலிமை’ படத்தில் அஜித்குமாருக்கு 3 வில்லன்கள்
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது.
2. ‘வலிமை’ பட சண்டை காட்சியில் ‘டூப்’ நடிகரை தவிர்த்த அஜித்குமார்
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த ‘பிங்க்’ இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ வெற்றி பெற்றது. அந்த படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடிக்கிறார்.
3. அஜித்குமார் படத்தில் இலியானா?
அஜித்குமார் படத்தில் இலியானா நடிக்க உள்ளாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
4. புதிய படத்தில் அஜித் ஜோடி யார்?
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு வலிமை என்று தலைப்பு வைத்துள்ளனர்.
5. துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை
நடிகராக இருப்பதையும் தாண்டி கார், பைக் பந்தயங்கள், புகைப்படங்கள் எடுப்பது போன்றவற்றில் திறமை காட்டி வருகிறார் அஜித்குமார். படப்பிடிப்பு குழுவினருக்கு ருசியாக சமைத்து கொடுத்தும் பாராட்டு பெற்றுள்ளார்.