சினிமா செய்திகள்

துணை நடிகையுடன் மோதல் நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் வழக்கு + "||" + Cybercrime case against actress Sri reddy

துணை நடிகையுடன் மோதல் நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் வழக்கு

துணை நடிகையுடன் மோதல்  நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் வழக்கு
நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தருவதாக படுக்கையில் தன்னை பயன்படுத்தி விட்டு ஏமாற்றி விட்டதாக புகார் கூறினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் இதில் சிக்கினர். அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். முகநூல் பக்கத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்கள் விவரங்களையும் தொடர்ந்து வெளியிட்டார்.

அவரது வாழ்க்கை தமிழில் ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகிறது. இதில் ஸ்ரீரெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை சாடினார். 3 திருமணங்கள் செய்தவர். இவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியலுக்கு தகுதி இல்லாதவர் என்றெல்லாம் வசை பாடினார். இதுபோல் தெலுங்கு துணை நடிகை கராத்தே கல்யாணி, நடன இயக்குனர் ராகேஷ் ஆகியோர் மீதும் அவதூறு கூறினார். இதையடுத்து கராத்தே கல்யாணியும், ராகேசும் சைபர் கிரைம் போலீசில் ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தனர். தங்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி வருவதாக புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். அத்துடன் ஸ்ரீரெட்டி பேசிய ஆபாச வீடியோ ஆதாரத்தையும் வழங்கினர்.

இதையடுத்து ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தெலுங்கு திரையுலகினர் மத்தியில் ஸ்ரீரெட்டி கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.