சினிமா செய்திகள்

தோற்றத்தை மாற்றினார் குத்துச்சண்டை வீரராக ஆர்யா + "||" + Arya as boxer

தோற்றத்தை மாற்றினார் குத்துச்சண்டை வீரராக ஆர்யா

தோற்றத்தை மாற்றினார்  குத்துச்சண்டை வீரராக ஆர்யா
நடிகர் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார்.
ஆர்யா நடிப்பில் கடந்த வருடம் மகாமுனி, காப்பான் படங்கள் திரைக்கு வந்தன. தற்போது டெடி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ரஞ்சித் அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கார்த்தியின் மெட்ராஸ் படத்தை டைரக்டு செய்தார்.

பின்னர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா படங்களை இயக்கி முன்னணி டைரக்டராக உயர்ந்தார். அடுத்து பழங்குடியின தலைவரான பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். தற்போது அந்த படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு ஆர்யா நடிக்கும் பட வேலைகளை தொடங்கி உள்ளார்.

இந்த படம் வடசென்னையில் நடந்த உண்மை சம்பவங்களுடன் குத்துச்சண்டையை மையமாக வைத்து தயாராகிறது. இதில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். அவருடன் சத்யராஜ், கலையரசன், துஷாரா ஆகியோரும் நடிக்கின்றனர். படத்துக்கு சல்பேட்டா பரம்பரை என்று பெயர் வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்துக்காக கடும் உடற்பயிற்சிகள் செய்து பாடி பில்டராக மாறி உள்ளார் ஆர்யா. அந்த தோற்றத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வலிமையாக இருப்பதுதான் உங்களுக்குள்ள வாய்ப்பு, நீங்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்பது உங்களுக்கு தெரியாது என்று பதிவிட்டுள்ளார்.