சினிமா செய்திகள்

வைரலாகும் அஜித்தின் வலிமை படத்தின் புதிய தோற்றம்? + "||" + Ajith's valimai in the film is the new look of the film?

வைரலாகும் அஜித்தின் வலிமை படத்தின் புதிய தோற்றம்?

வைரலாகும் அஜித்தின் வலிமை படத்தின் புதிய தோற்றம்?
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நடிகர் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
சென்னை

நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் வேகமாக தயாராகி வருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.  அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர். இந்தப் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்கின் போது நடிகர் அஜித்குமாருக்கு சண்டைக் காட்சியில், கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது என செய்திகள் வெளியானது.

தற்போது நடிகர் அஜித் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதில் அஜித்தின் கெட்டப் குறித்து பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித் தனது உதவியாளரின் திருமணத்தில் பங்கேற்றார் என்று சமூக வலைதளங்களில் புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றது.

இதில் அஜித்தினுடைய கெட்டப் குறித்து ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஷார்ட் பிரவுனி ஹேர், கிளீன் ஷேவ் என அஜித்தின் நியூ லுக் அடங்கிய புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. ஒருவேளை வலிமை படத்தில் இந்த லுக்கில்தான் அஜித் நடிக்கிறாரோ என்று ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. இளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி...? நடிகர் நெப்போலியன்
இளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி...? என நடிகர் நெப்போலியன பேட்டி அளித்து உள்ளார்.
2. மரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன்- திருமணம் குறித்து வனிதா விஜயகுமார்
மரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன் என திருமணம் குறித்து வனிதா விஜயகுமார் கூறி உள்ளார்.
3. விமானத்தில் தன்னை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்- நடிகை ராதிகா ஆப்தே
விமானத்தில் தன்னை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் குறித்து நடிகை ராதிகா ஆப்தே கூறி உள்ளார்.
4. நயன்தாரவுக்கு கொரோனா பாதிப்பா...? விக்னேஷ் சிவன் கோபம்
கொரோனா வதந்தி பரப்பியவர்களுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிலடி கொடுத்திருக்கிறார்.
5. மிகப்பெரிய வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் பட இயக்குனர் மரணம்
'அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.