சினிமா செய்திகள்

நடிகர்களுக்கு டாப்சியின் அறிவுரை + "||" + Topsy's advice to actors

நடிகர்களுக்கு டாப்சியின் அறிவுரை

நடிகர்களுக்கு டாப்சியின் அறிவுரை
மக்கள் நடிகர்களை தெய்வமாக பார்க்கிறார்கள். இந்த சக்தியை நடிகர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நடிகை டாப்சி கூறினார்.
டாப்சி நடித்து கடந்த வருடம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் கேம் ஓவர் படமும், இந்தியில் மிஷன் மங்கள், சாந்த் கி அங்க் படங்களும் வந்தன. தற்போது தப்பட் இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் திரைக்கு வருகிறது. ஹசீன் துல்ருபா, தட்கா ஆகிய இந்தி படங்களும் கைவசம் உள்ளன. டாப்சி அளித்த பேட்டி வருமாறு:-

“ஆண், பெண் பாலின பேதங்களை சமீப காலமாகத்தான் புரிந்து கொண்டேன். மகளை வெளியே செல்ல வேண்டாம் என்று தந்தை தடுத்தால் அதை எதிர்த்து கேள்வி கேட்க கூடாது. இரவு 8 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிட வேண்டும். காரணம் ஆண்களால் சுயகட்டுப்பாட்டுடன் இருக்க முடியாது.

ஆண், பெண் பாலின பேதங்களில் பல விஷயங்கள் இருக்கிறது. அவை தவறு என்று குரல் எழுப்புவதால் மாற்ற முடியாது. நமக்கு அடுத்து வரும் தலைமுறை இந்த வேறுபாட்டை உணராமல் இருக்கலாம். ஆனால் அதற்கு அடுத்து வரும் தலைமுறையினர் கண்டிப்பாக உணர்ந்து கொள்வார்கள்.

இந்தியாவில் மக்கள் நடிகர்களை தெய்வமாக பார்க்கிறார்கள். அவர்கள் சொல்வதை கேட்கிறார்கள். இந்த சக்தியை நடிகர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். நான் சமூக பிரச்சினைகளை பேசிய ஒன்றிரண்டு படங்களில் நடித்தேன். அது மக்களை சென்று சேர்ந்தது. எனவே நடிகை என்ற வகையில் எனக்கு இருக்கும் சக்தியை சரியாக பயன்படுத்துவேன்.”

இவ்வாறு டாப்சி கூறினார்.