சினிமா செய்திகள்

சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள் + "||" + Samantha's favorite men

சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்

சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்
நகைச்சுவை உணர்வு உள்ள ஆண்களை பிடிக்கும் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
சமந்தா நடித்துள்ள ஜானு தெலுங்கு படம் திரைக்கு வந்து பாராட்டை பெற்றுக் கொடுத்துள்ளது. அடுத்து தமிழ், தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் நடிகையாகாமல் இருந்திருந்தால் கண்ணாடி அணிந்து கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டு இருப்பேன். கண்டிப்பாக பணம் சம்பாதிக்கும் முயற்சியில்தான் இருப்பேன். ஏனென்றால் சிறுவயதில் இருந்தே சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பது எனது கனவு.

வைர நகைகள் மிகவும் பிடிக்கும். அதை அணியும்போது அழகாக இருக்கிறேன் என்று பாராட்டுகிறார்கள். எனக்கு பிடித்த சுற்றுலா தளம் புளோரிடாவில் இருக்கும் மியாமி. அமெரிக்க வெப் தொடர்கள் அதிகம் பார்ப்பேன். நகைச்சுவை உணர்வு உள்ள ஆண்களை பிடிக்கும். நகைச்சுவை இருந்தால்தான் சிரித்து சந்தோஷமாக இருக்க முடியும்.

பழச்சாறுகள் அதிகம் சாப்பிடுவேன். மறக்க முடியாத இனிய நினைவு என்பது நாக சைதன்யா மாலத்தீவில் வைத்து என்னை காதலிக்கிறேன் என்று சொன்ன சம்பவம். அந்த கணத்தை வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாது. எனக்கு அவர் தந்த முதல் பரிசு கைப்பை. புத்தகங்கள் படிப்பது மிகவும் பிடிக்கும்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் எனது பெயர் யசோதா அந்த பெயரை சொல்லித்தான் எல்லோரும் அழைப்பார்கள்.”

இவ்வாறு சமந்தா கூறினார்.