சினிமா செய்திகள்

தடைகளை கடந்து திரைக்கு வரும் ஜீவாவின் ‘ஜிப்ஸி’ + "||" + Overcome obstacles and come to the screen Jeeva's Gypsy

தடைகளை கடந்து திரைக்கு வரும் ஜீவாவின் ‘ஜிப்ஸி’

தடைகளை கடந்து திரைக்கு வரும் ஜீவாவின் ‘ஜிப்ஸி’
தடைகளை கடந்து ‘ஜிப்ஸி‘ படம் அடுத்த மாதம் 6-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ‘ஜிப்ஸி‘. நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பை முடித்து சில மாதங்களுக்கு முன்பே திரைக்கு கொண்டுவர திட்டமிட்டனர். ஆனால் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சான்றிதழ் அளிக்க மறுத்தனர்.

இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஜிப்ஸி  திரைப்படத்தில் என்ன பிரச்சினை. இருமுறை தணிக்கை சான்றிதழ்  மறுக்கப்பட்டு டிரிபியூனல் செல்ல அறிவுறுத்தப்பட்டதா? ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை கேவலப்படுத்தும் காட்சிகளும், முதல்வர் யோகி கெட்டப் போட்டு அவர் பெயரை பயன்படுத்தியதும், இந்து கலவர காட்சிகளும் காரணமா?” என்று பதிவிட்டார்.

படத்தில் உள்ள இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகளையும், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை கேலி செய்வது போன்ற காட்சிகளையும் நீக்கும்படி தணிக்கை குழுவினர் வற்புறுத்தியதாக கூறப்பட்டது. அதனை ஏற்க மறுத்து மறுதணிக்கைக்கு படத்தை அனுப்பினர்.

அங்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மும்பையில் உள்ள தணிக்கை தீர்ப்பாயத்துக்கு படத்தை கொண்டு சென்றனர். அங்கு சில காட்சிகள் நீக்கப்பட்டு தற்போது ‘ஏ’ சான்றிதழுடன் அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து தடைகளை கடந்து ‘ஜிப்ஸி‘ படம் அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.