சினிமா செய்திகள்

தமன்னாவை கவர்ந்த கதாபாத்திரம் + "||" + Tamanna favorite character

தமன்னாவை கவர்ந்த கதாபாத்திரம்

தமன்னாவை கவர்ந்த கதாபாத்திரம்
நான் நடித்த படங்களில் பாகுபலி என்னை மிகவும் கவர்ந்தது என்று நடிகை தமன்னா கூறினார்.
தமிழில் கேடி படத்தில் அறிமுகமான தமன்னா, வியாபாரி, கல்லூரி, அயன், பையா, வீரம், பாகுபலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது நவம்பர் ஸ்டோர்ஸ் என்ற வெப் தொடரில் நடிக்கிறார். இந்த நிலையில் சமூக  வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்விகளுக்கு தமன்னா பதில் அளித்து  கூறியதாவது:-

“சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புகிறேன். நான் அழகாக இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு எனது பெற்றோர்கள்தான் காரணம். அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அஜித்குமாருடன் சேர்ந்து நடித்தது எனக்குள் நல்ல அனுபவமாக இருக்கிறது. வாழ்க்கை என்பது சாகசம்.

காஜல் அகர்வால் மிகவும் ஜாலியான நடிகை. நாங்கள் இருவரும் ஒன்றாக சுற்றுவோம். எல்லா விஷயங்களையும் அவர் தெரிந்து வைத்து இருக்கிறார். எனக்கு பிடித்த இடம் என்னுடைய வீடுதான். என்னை வீட்டில் தம்மு என்ற செல்ல பெயர் வைத்துத்தான் அழைக்கிறார்கள். எனக்கு பாவ் பாஜி மிகவும் பிடிக்கும் விரும்பி சாப்பிடுவேன்.

கல்லூரி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியை எரியும் பஸ்சில் படமாக்கினர். அதில் நடித்தது கஷ்டமாக இருந்தது. நான் நடித்த படங்களில் பாகுபலி என்னை மிகவும் கவர்ந்தது. அதில் சவாலான கதாபாத்திரத்தில் நடித்தேன். அதில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். கேமரா முன்னால் நிற்கும் ஒவ்வொரு நாளுமே புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.”

இவ்வாறு தமன்னா கூறினார்.