இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களிடம் கொடுக்கும் நடிகர்!


இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களிடம் கொடுக்கும் நடிகர்!
x
தினத்தந்தி 25 Feb 2020 9:11 AM GMT (Updated: 2020-02-25T14:41:08+05:30)

இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு கொடுக்கும் ‘ராபின்ஹுட்’ ஆக ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடிக்கிறார். படத்துக்கு, ‘ராபின்ஹுட்’ என்றே பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

 ‘ராபின்ஹுட்’  படத்தில் சங்கிலி முருகன், ஆர்.என்.ஆர்.மனோகர், சதீஷ், அம்மு அபிராமி ஆகியோரும் நடித்துள்ளனர். கதை-திரைக்கதை-டைரக்‌ஷன் பொறுப்புகளை ஏற்ற கார்த்திக் பழனியப்பன் கூறியதாவது:-

“40 வருடங்களுக்கு முன்பு மச்சம்பட்டி என்ற கிராமத்தில் மழையே பெய்யாததால் மக்கள் வறுமையில் வாடு கிறார்கள். அவர்களின் ஒரே ஆறுதல், சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி. அவரும் திடீரென்று மரணம் அடைகிறார்.

இந்த நிலையில், அந்த கிராமத்து மக்களுக்கு கிடைக்க இருந்த அரசின் பணத்தை ஊர் தலையாரி திட்டமிட்டு திருட முயற்சிக்கிறார். அவரின் சதித்திட்டத்தை தடுத்து, அரசாங்க பணத்தை ஊர் மக்களுக்கு பெற்று கொடுப்பதற்காக ராஜேந்திரன் போராடுகிறார். இந்த காட்சி நகைச்சுவையாக படமாக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டி அருகில் உள்ள வல்லப்பன்பட்டி என்ற கிராமத்தில், வறண்ட பூமி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை ஜூட் மேய்னி, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.”


Next Story