சினிமா செய்திகள்

‘மாயத்திரை’ படத்தில் பழிவாங்காத பேய்! + "||" + In the movie Mayathirai, The devil who does not revenge

‘மாயத்திரை’ படத்தில் பழிவாங்காத பேய்!

‘மாயத்திரை’ படத்தில் பழிவாங்காத பேய்!
பிடிச்சிருக்கு, முருகா, கோழி கூவுது ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக்குமார், ‘மாயத்திரை’ படத்தில், திரைப்பட கல்லூரியில் படித்த ‘சவுண்டு என்ஜினீயர்’ ஆக நடித்து இருக்கிறார்.
அசோக்குமாரின் முறைப்பெண்ணாக-கதைநாயகியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக சாந்தினி தமிழரசன் நடித்து இருக்கிறார். 

டைரக்டர்கள் பாலா, எழில், அகத்தியன் ஆகியோரிடம் உதவி டைரக்டராக இருந்த சம்பத்குமார் டைரக்டு செய்கிறார்.

15 வருடங்களுக்கு முன்பு, ‘தாலி புதுசு’ என்று குஷ்புவை வைத்து படம் தயாரித்த வி.சாய்பாபு, இந்த படத்தை தயாரிக்கிறார். ‘மாயத்திரை’ ஏற் படுத்தப் போகும் திகில் பற்றி டைரக்டர் சம்பத்குமார் கூறும்போது, “பொதுவாக எல்லா பேய் படங் களிலும் பேய் பழிவாங்குவது போல் காட்டுவார்கள். ‘மாயத்திரை’யில் பேய் பழிவாங்காது. கதாநாயகனுக்கு உதவும். அவரை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும்” என்றார்.

“இந்த படத்தின் பெரும்பகுதி காட்சிகளை குற்றாலம் அருகில் உள்ள புளியங்குடி கிராமத்தில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.